BREAKING NEWS

கலைஞர் பிறந்தநாள் விழா – ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்.

கலைஞர் பிறந்தநாள் விழா – ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாள் முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் வழங்கினார்.

செம்பனார்கோவில் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் விழாவில் அவரது திரு உருவப் படத்திற்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம். முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு புடவை, அரிசி, தென்னங்கன்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் திமுக ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.அன்பழகன், எம்.அப்துல்மாலிக், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் பி.எம். ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் திருக்கடையூர் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன் கலந்துகொண்டு கலைஞர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ஒன்றிய குழு துணை தலைவர் பாஸ்கர், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் அமுர்த விஜயகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் விழாவில் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் கலந்துகண்டு கலைஞர் திருவுருவ படத்திற்கு மாலை மாலை அணிவித்து பின்னர் சின்னூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு மைய சமையல் உதவியாளர் ஜி. சித்ரா மற்றும் திருக்களாச்சேரி உதவிபெறும் பள்ளி சத்துணவு சமையலர் எஸ் .சீதா ஆகியோர் பணியின்போது காலமானதை தொடர்ந்து அவர்களது குடும்ப வாரிசுகளுக்கு ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா , ஒன்றிய குழு உறுப்பினர்கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

படவிளக்கம்:செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு சத்துணவு சமையலர்கள் பணியின்போது காலமான தொடர்ந்து அவர்களது குடும்ப வாரிசுகளுக்கு தலா 5 லட்சத்துக்கான காசோலையை எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் வழங்கியபோது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )