கல்பகனூர் மொரப்பங்காடு பகுதியில் மின் கசிவு காரணமாக கரும்புத் தோட்டத்தில் தீ விபத்து.

ஆத்தூர் செய்தியாளர் ராஜ்குமார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்புகனூர் மொரப்பங்காட்டு பகுதியில் வசித்து வருபவர் பெரியசாமி மகன் செல்வகுமார் இவர் தனது விவசாயி தோட்டத்தில் விவசாயம் செய்து வந்த நிலையில்,
அவரது விவசாயத் தோட்டத்தில் கரும்பு பயிரிட்டு இருந்துள்ளார் மேலும் அப்பகுதியில் விவசாயத் தோட்டத்திற்கு மின்சாரம் வழங்குவதற்காக அப்பகுதியில் மின் கம்பத்திலிருந்து அப்பகுதியில் உள்ள மின்சார ஒயர்கள் மீது கரும்பு தோட்டத்தின் கரும்பு சோலைகள் மோதியதின் காரணமாக, அப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.

உடனடியாக அப்பகுதி மக்கள் ஆத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்து பின்னர் அப்பகுதி மக்களே தீ மேலும் பரவாமல் இருக்க தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
உடனடியாக அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பரவாமல் இருக்க அப்பகுதியில் தண்ணீர் ஊற்றி அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சேகர் அவர்கள் அப்பகுதியில் மின் ஒயர் உராசியது காரணமாக தீப்பற்றியதால் மின்சார ஊழியர்களின் மூலம் மின் ஒயரை சரி செய்ய விவசாயிக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
