BREAKING NEWS

கல்லூரி மாணவர் தற்கொலை விவகாரம் : ஒருவர் கைது: 5 பேர் நீதிமன்றத்தில் சரண்.

கல்லூரி மாணவர் தற்கொலை விவகாரம் : ஒருவர் கைது: 5 பேர் நீதிமன்றத்தில் சரண்.

 செய்தியாளர் பா.முனீஸ்வரன்.

சிவகங்கை மாவட்டம். திருப்புவனத்தில் கல்லூரி மாணவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக செவ்வாய்க்கிழமை போலீசார் ஒருவரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தேடப்பட்ட ஐந்து பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் உச்சிமாகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கல்லூரி மாணவர் ஜீவ சூர்யா 19 கடந்த 28 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இவரை கழுகர் கடை கிராமத்தைச் சேர்ந்த சிலர் தாக்கியதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறவினர்கள் திருபுவனம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

 

இதை அடுத்து. ஜீவ சூர்யாவை தாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய கழுகர் கடையைச் சேர்ந்த ஜமாலுதீனை போலீசார் கைது செய்தனர்.

 

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ரியாஸ் கான் 29 நைனார் முகமது 27 சிக்கந்தர் பாதுஷா 24 சுலைமான் ஜாவித் 27 முகமது ராஜா 23 உள்ளிட்ட ஐந்து பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரண் அடைந்ததாக திருப்புவனம் போலீசார் தெரிவித்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )