கல்லூரி மாணவிகள் 13 பேர் மயக்கம்!! அதிர வைக்கும் பிண்ணனி.

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே சேனாங்காட்டையில் தனியார் வேளாண் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் மாணவ, மாணவிகள் வந்து விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று கல்லூரி விடுதி மாணவ, மாணவிகள் 13 பேர் திடீரென்று மயங்கி விழுந்தனர். இதை பார்த்து அதிர்ந்து போன கல்லூரி நிர்வாகம் மாணவ, மாணவிகளை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்து ஆர்டிஓ சிவக்குமார் மாணவ, மாணவிகளை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்தார். அப்போது மாணவ, மாணவிகளிடம் திடீர் மயக்கம் குறித்து விசாரித்த போது அதிர்ச்சி காத்திருந்தது.
விடுதி கேண்டீனில் தினமும் காலை 9.30 மணிக்கே காலை உணவு வழங்கப்படுகிறது. ஆனால் காலை 7 மணிக்கே வகுப்புகள் தொடங்கப்பட்டு விடுகிறது. இதனால் கல்லூரிக்கு தினமும் சாப்பிடாமலே செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் நாங்கள் மிகவும் பலவீனமாக இருந்தோம. எனவே திடீரென்று மயங்கி விழ நேரிட்டது ’’ என்று மாணவ, மாணவிகள் கூறினர்.
இது குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என்றும், தவறு நடந்து இருக்கும் பட்சத்தில் கல்லூரி விடுதிம், கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்டி.ஓ சிவக்குமார் உறுதி அளித்தார்.தனியார் கல்லூரி விடுதி மாணவ, மாணவிகள் திடீரென்று 13 பேர் மயங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.