BREAKING NEWS

`கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள்’- காமராஜர் பிறந்தநாளில் முதல்வர் உறுதிமொழி.

`கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள்’- காமராஜர் பிறந்தநாளில் முதல்வர் உறுதிமொழி.

“கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள். பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் உறுதிகொள்வோம்“ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் தமிழ்நாடு அரசின் சார்பில் கல்வி வளர்ச்சி நாளாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை கல்விவளர்ச்சிநாள் எனத் தலைவர் கலைஞர் அறிவித்ததே, நாம் கல்வி பெற்றிட அவர் முன்னெடுத்த திட்டங்களைத் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்கூறும்!

போராடிப் பெற்ற கல்வி உரிமையால், அறிவார்ந்த நற்சமுதாயமாய் விளங்கிடுவோம்! கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள்! தரமான கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் நாம் செயல்படுத்தி வரும் திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்திடப் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் உறுதிகொள்வோம்!” என்று கூறியுள்ளார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )