BREAKING NEWS

களக்காட்டில் அறிவகம் மதரஸா கூட்டு குர்பானி ஏழை மக்களுக்கு வினியோகம்.

களக்காட்டில் அறிவகம் மதரஸா கூட்டு குர்பானி ஏழை மக்களுக்கு வினியோகம்.

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் அறிவகம் மதரஸா சார்பாக கூட்டு குர்பானி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தனியாக குர்பானி குடுக்க முடியாதவர்கள், குர்பானியின் கடமையை நிறைவேற்றுவதற்கு 7 நபர்கள் சேர்ந்து மாடு அல்லது ஒட்டகம் கொடுப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பது ஷரியத், அதன் அடிப்படையில் களக்காட்டில் அறிவகம் மதரஸா சார்பாக கூட்டு குர்பானி ஏற்பாடு செய்யப்பட்டு அதன் இறைச்சியை ஏழை எளிய மக்களுக்கு வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இன்று 11-07-2022 காலை 6.00 மணிக்கு களக்காடு கோவில் பத்தில் வைத்து ஆரிப் பைஜி தலைமையில் 5 மாடு குர்பானி கொடுக்கப்பட்டது .பின்பு கோட்டை ஜமாத், வியாசராஜ புரம் ஜமாத், சிங்கம் பத்து ஜமாத், கோவில்பத்து ஜமாத், கேசவனேரி, S.N பள்ளிவாசல், போன்ற பகுதிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில். K.M கமாலுதீன், காஜா முகைதீன், முகம்மது ரபிக் பீமாஸ் உசேன், களந்தை மீராசா, அசாருதீன், யூனுஸ், ஷகில், ஷாருக்கான்,கபிர், அசன், இஸ்மாயில், உசேன், முகம்மது அலி,கிதர், அபுபக்கர், சாகுல்ஹமீது, ஆகியோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )