BREAKING NEWS

களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம்.

களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம்.

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் நகர தலைவர் கமாலுதின் தலைமையில் நகர அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந் நிகழ்வில் செயற்குழு உறுப்பினர் ஆரிப், கபிர், ஷகில், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொது செயலாளர் களந்தை மீராசா கலந்து கொண்டு ஒரு வருடத்திற்க்கான திட்டமிடல் பற்றி பேசினார். கூட்டத்தில் கீழக்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன ஏற்கனவே நகராட்சியில் மூன்று வீதமான கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் சார்பாக நகராட்சி ஆணையரிடம் எஸ்டிபிஐ கட்சி கொடுக்கப்பட்ட மனுவிற்கு நகராட்சி நிர்வாகம் எடுத்த தீர்வினை கேட்க வேண்டும் சிவபுரம் குளிக்க செல்லும் பொது மக்களுக்கு பயன்பாட்டிற்கு இருந்த நகராட்சிக்கு சாலையை சனி மற்றும் ஞாயிறு கிழமை மட்டும் அடைத்து வைத்திருக்கிறார்கள் இதனை உடனடியாக அகற்றுமாறு வன பகுதி இயக்குனர் அவர்களுக்கு மனு கொடுக்க வேண்டும்
புதிய நகராட்சி நிர்வாகம் செயலுக்கு வந்து இரண்டு மாதம் ஆன நிலையில் 27 வார்டுகளிலும் பொதுமக்களின் பிரச்சினைகளை கையில் எடுத்து தாமாக முன் வந்து செய்ய வேண்டும் என உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக நகர செயலாளர் காஜா நன்றியுரையாற்றினர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )