களக்காட்டில் நெல்லை புறநகர் மாவட்ட செயலக கூட்டம்

களக்காட்டில் நெல்லை புறநகர் மாவட்ட செயலக கூட்டம் மாவட்ட தலைவர் M.K பீர்மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொது செயலாளர் களந்தை மீராசா வரவேற்று பேசினார். மாவட்ட அமைப்பு பொதுசெயலாளர் பத்தமடை சிராஜ் , மாவட்ட துணை தலைவர் முல்லை மஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில தலைமை அறிவுறுத்தலின் படி கூட்டத்தில் கிழக்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றுபப்ட்டன. கட்சியின் 14வது ஆண்டு துவக்க தினமாக ஜூன் 21ல் புறநகர் மாவட்டத்திற்க்கு உட்பட்ட அம்பை தொகுதி, நாங்குநேரி தொகுதி, இராதாபுரம் தொகுதி ஆகிய பகுதிகளில் உட்பட்ட 40 இடங்களில் கொடியேற்றம் நடைபெறும், மேலும் நலத்திட்ட உதவி, பேரணி, தெருமுனை கூட்டம், கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம், இரத்தான முகாம், மருத்துவ முகாம், 500க்கும் மேற்பட்ட மரக்கன்று நடுதல் ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளன. இது ஜூன் 21ல் இருந்து ஜூலை 20 வரை நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் இறுதியில் மாவட்ட செயலாளர் கல்லிடை சுலைமான் நன்றியுரையாற்றினர்.
