களக்காட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பி.எப்.ஐ மீது பொய் வழக்கு போட்டு ரைடு செய்த என். ஐ.ஏ, அமலாத்துறை வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் இன்று மதியம் 1.30 மணிக்கு கோட்டை ஜிம்மா பள்ளிவாசல் அருகில் பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் மீது ஆர்.எஸ்.எஸ், பாஜாகவின் கைக்கூலியாக செயல்படும் தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும்
அமலாகத்துறை (ED) போன்ற அமைப்புகள் பொய்யான வழக்கை பதிவு நேற்றை தினம் நள்ளிரவில் ரைய்டு என்கின்ற பெயரில் அத்துமீறி வீட்டின் உள்ளே சென்று நிர்வாகிகளை கைது செய்ததை கண்டித்து நெல்லை களக்காட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
மேலும் ஆரிப்பை ஜி, ரபிக், காஜா, கபீர், ஷகில், முகம்மது அலி, குலாம், ஆதம், ஜமீன், மறறும் ஜமாத்தார்கள், என ஆகியோர்கள் என 100 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.
CATEGORIES திருநெல்வேலி
