கள்ளக்குறிச்சி கலவரத்தின் போது வன்முறையாளர்களை தடுக்க முடியாத அளவிற்கு காவல்துறையின் கைகளை கட்டிப்போட்டு உள்ளது திமுக அரசு என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு குற்றச்சாட்டு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக அமைப்பு செயலாளராக புதிய பொறுப்பு ஏற்ற பின்பு சட்டமன்ற அலுவலகம் வருகை புரிந்த முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூக்கு அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர் சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான தொண்டர்கள் அவரை மலர் கொடுத்துக் கொடுத்தும் சால்வை அணிவித்தும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
பின்னர் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளரிடம் கூறுகையில் இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒரு தலைமையில் இயங்குகின்றது அதே போல் தமிழகத்திலும் அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் இயங்கி வந்தது தற்போதும் ஒற்றை தலைமை வேண்டும் என்று தொண்டர்கள் விருப்பத்திற்கு ஏற்ப இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
திமுக அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றாமல் மக்களுக்கு சுமையை கொடுக்கும் விதமாக மின் கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு பரிசாக கொடுத்துள்ளது. அதிமுகவிலிருந்து இரண்டு மூன்று பேர் பிரிந்து சென்றுள்ளனர். தொண்டர்கள் யாரும் பிரிந்து செல்லவில்லை தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் 98 சதவீதத்திற்கும் மேல் நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணையில் உள்ளது இந்த விசாரணை முடிவில் தான் முழு உண்மை வெளியே வரும்
கள்ளக்குறிச்சி கலவரத்தின் போது வன்முறையாளர்களை தடுக்க முடியாத அளவிற்கு காவல்துறையின் கைகளை கட்டிப்போட்டு உள்ளது திமுக அரசு
மக்கள் அன்றாட பயன்படுத்தக்கூடிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி என்பது ஏற்றுக்கொள்ள முடியாது இதுகுறித்து எங்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவியலின் பெயரில் எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்கள்
அரிசிக்கு எல்லாம் ஜிஎஸ்டி வரி போட்டதை அதிமுக கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்ளாது. திமுக ஆட்சியில் அன்றாட மக்களுக்கு சுமையை கொடுக்கும் வகையில் இந்த ஆட்சி மின் கட்டண உயர்வை பரிசாக வழங்கி உள்ளது நிச்சயமாக இந்த அரசு மக்களை வஞ்சிக்க கூடிய அரசாக உள்ளது. நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது கூட மத்திய அரசு மின் கட்டண உயர்வை உயர்த்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார்கள் ஆனால் மக்கள் மீது எந்தவித சுமையும் செலுத்தக்கூடாது என்று மின்வாரியத்திற்கு நாங்கள் கூடுதல் நிதி ஒதுக்கி 10 ஆண்டுகளாக மின்கட்டணத்தை உயர்த்தாமல் இருந்தோம் மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று சட்டம் கொண்டு வரவில்லை மின்கட்டணத்தை இவர்கள் உயர்த்தி விட்டு மத்திய அரசு குறை சொல்வது சரி இல்லை பொதுமக்களை பாதிக்கும் வகையில் மின் கட்டண உயர்வை உயர்த்திவிட்டு மத்திய அரசை குறை கூறுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் சுயநலத்திற்காக ஒரு சிலர் பிரிந்து சென்றிருக்கிறார்கள் ஆனார் ஒரு தொண்டர் கூட பிரிந்து செல்லவில்லை.
ஒற்றைத் தலைமை வேண்டுமென்று மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் முன் வைத்தோம் ஆனால் யார் என்று கூட அன்று நாங்கள் முடிவு செய்யவில்லை பொதுக்குழுதான் தீர்மானம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தும் ஓபிஎஸ் கு பொதுக் குழுவில் தனக்கு ஆதரவு இருந்திருந்தால் அவரும் போட்டியிட வாய்ப்பு கிடைத்திருக்கும்.
பொருளாளர் என்ற முறையிலே நடைபெற்ற முடிந்த பொது குழுவில் அவருக்கும் இயற்கை ஒதுக்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டது ஆனால் அவர் கலந்து கொள்ளாமல் தலைமைக் கழகம் சென்று அதிமுக தலைமைக் கழகத்தை அடித்து நொறுக்கியது அவருக்கு இருந்த இரண்டு சதவீத ஆதரவையும் அவர் இழந்து விட்டார். அதன் அடிப்படையில் பொது குழுவில் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு இதற்கு காலம் தான் பதில் சொல்லும் எனக் தெரிவித்தார்.