கழிவுநீர் வெளியேறி வருவதால், அப்பகுதி பொதுமக்கள் உடனே சீர் செய்ய வேண்டும் என கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் உடனே ஆய்வு செய்து நிரந்தர தீர்வு காண படும் என தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி, தலைமை தபால் நிலைய சாலை மற்றும் மணிக்கூட்டு அண்ணா சிலை அருகே அடிக்கடி பாதாள சாக்கடையிலிருந்து,
கழிவுநீர் வெளியேறி வருவதால், அப்பகுதி பொதுமக்கள் உடனே சீர் செய்ய வேண்டும் என கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகனிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் அனைத்து துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு, கழிவுநீர் வெளியேறாமல் இருக்க உடனடியாக நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்கள்.
அதிகாரிகளும், நாளைய தினமே பணிகள் தொடங்கப்பட்டு, விரைவாக நிரந்தர தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.
அருகில், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன், கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் ம.செந்தில்முருகன், கும்பகோணம் மாநகராட்சி பொதுசுகாதார குழு தலைவர் குட்டி.இரா.தெட்சிணாமூர்த்தி,
மாநகராட்சி பொறியாளர் லலிதா, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் தினேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் கீதப்பிரியா விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.