BREAKING NEWS

காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பல்லடம் 1வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் இடைத்தேர்தலில்.

காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பல்லடம் 1வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் இடைத்தேர்தலில்.

பல்லடம் :  தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள ஊரக,நகர,உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி பல்லடம் ஒன்றியத்தில் 1வது வார்டு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த ஜூன்.20ல் துவங்கியது. இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல்படி திமுக. கூட்டணி சார்பில் ஈஸ்வரமகாலிங்கம் (காங்கிரஸ்), குமாரவேல்( அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்), சுயேட்சை வேட்பாளர்களாக சதீஸ்குமார்( சாலை உருளை),சின்னசாமி( தண்ணீர் குழாய்),ராஜ்(மறை திருக்கி),,ஜெயபிரகாஷ்( தீப்பெட்டி) உள்ளிட்ட 6 பேர் இடைத்தேர்தலில் போட்டியிட்டனர்.

 

இதில் ஆண்கள் 3720,பெண்கள் 3796, இதர பிரிவினர் 2,ஆக மொத்தம் 7518 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 9 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.இதில் 4740 வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது.

 

தேர்தல் நடத்தும் அலுவலர் அகமது, உதவி அலுவலர் அய்யாசாமி, பல்லடம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன், உள்ளிட்ட அதிகாரிகள் வாக்கு எண்ணும் பணியை ஒருங்கிணைத்து நடத்தினர். பல்லடம் போலீஸ் டி.எஸ்.பி. வெற்றி செல்வன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

 

இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈஸ்வரமகாலிங்கம் 191 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம். ஈஸ்வரமகாலிங்கம் – 1605 வாக்குகளும், சுயேட்சை வேட்பாளர்கள் சதீஷ்குமார் – 1414 வாக்குகளும், ராஜ் – 743 வாக்குகளும், சின்னசாமி – 632 வாக்குகளும், ஜெயப்பிரகாஷ் – 193 வாக்குகளும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வேட்பாளர் குமரவேல் – 84 வாக்குகளும் பெற்றனர். 69 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. 191 வாக்குகள் வித்தியாசத்தில் ஈஸ்வரமகாலிங்கம் வெற்றி பெற்றார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )