காசிபநாத சுவாமி திருக்கோவில் தைப்பூச விழா.!
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருள்மிகு காசி பநாதசுவாமி திருக்கோவில் தைப்பூச விழா இன்று நடைபெற்றது.
அம்பாசமுத்திரம் நகர வியாபாரிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் கோவிலில் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
முன்னதாக தாமிரபரணி ஆற்றில் இருந்து 108 பால்குடம் ஊர்வலமாக பக்தர்கள் எடுத்து வந்து முக்கிய வீதிகள் வழியாக ரத வீதி சுற்றி வந்து காசிபநாத அவாமி கோவில் சென்றடைந்தனர்.
பின்னர் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் சிறப்பு தீப ஆராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. நண்பகல் அன்னதானமும் நடைபெற்றது. பின்னர் ஷண்முகர் வெள்ளிச் சப்பாத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
CATEGORIES ஆன்மிகம்
TAGS அம்பாசமுத்திரம்ஆன்மிகம்காசி பநாதசுவாமி திருக்கோவில் தைப்பூச விழாதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தாமிரபரணி ஆறுதிருநெல்வேலிதிருநெல்வேலி மாவட்டம்