BREAKING NEWS

காச வாங்கி கல்லாவுல போட்டுக்கிட்டு மக்களுக்கு நோய் கொடுக்குறீங்க மக்கள் தொகையை குறைக்கிறது எப்படினு உங்க கடையில் தெரிஞ்சுக்கலாம் சுகாதார ஆய்வாளர் பேச்சால் பரபரப்பு

காச வாங்கி கல்லாவுல போட்டுக்கிட்டு மக்களுக்கு நோய் கொடுக்குறீங்க   மக்கள் தொகையை குறைக்கிறது எப்படினு உங்க கடையில் தெரிஞ்சுக்கலாம் சுகாதார ஆய்வாளர் பேச்சால் பரபரப்பு

பூந்தமல்லி நகராட்சி உட்பட்ட டீ கடை மற்றும் பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட சிகரெட், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து பூந்தமல்லி நகராட்சி சுகாதார ஆய்வாளர் அய்யப்பன், பொது சுகாதார ஆய்வாளர் வடிவேலு ஆகியோர் தலைமையில் கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்ட போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து மூன்று கடைகளுக்கு தலா ஐந்தாயிரம் வீதம் ரூ.15 ஆயிரம் ஆபராதம் விதித்தனர்.

மேலும் பல்வேறு கடைகளில் சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்ததை கண்டுபிடித்து சுமார் 100 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அந்த கடைகளுக்கும் அப்ராதம் விதித்தனர். தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யும் கடைகளுக்கு அதிக அளவில் அபராதம் விதித்து சீல் வைக்கும் பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் காச வாங்கி கல்லாவுல போட்டுக்கிட்டு வர்ற மக்களுக்கு நோய் கொடுக்குறீங்க மக்கள் தொகையை குறைக்கிறது எப்படின்னு உங்க கடையில தெரிஞ்சிக்கலாம் என சுகாதார ஆய்வாளர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Share this…

CATEGORIES
TAGS