BREAKING NEWS

காஞ்சிபுரம் அடுத்த சிறுணையில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழப்பு உயிரிழந்தவரின் பெற்றோர் மனைவியே கொலை செய்துவிட்டதாக புகார் மனைவி தப்பியோட்டம், பாலுசெட்டி காவல்நிலைய போலீசார் விசாரணை.

காஞ்சிபுரம் அடுத்த சிறுணையில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழப்பு  உயிரிழந்தவரின் பெற்றோர் மனைவியே கொலை செய்துவிட்டதாக புகார்  மனைவி தப்பியோட்டம், பாலுசெட்டி காவல்நிலைய போலீசார் விசாரணை.

காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டி காவல்நிலையத்திற்குட்பட்ட சிறுணை கிராமத்தை சேர்ந்தவர் முனியன். இருங்காட்டுகோட்டியிலுள்ள ஓர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த இவருக்கு கடந்த 5வருடங்களுக்கு முன்பு திருப்புட்குழியை சேர்ந்த பரிமளா என்பவருடன் பெற்றோர்களின் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்று 3வயதில் ஓர் ஆண் குழந்தை உள்ளது.

 

இந்த நிலையில் பரிமளா பாலுசெட்டியிலுள்ள ஓர் தனியார் துணிக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். பரிமளா வேலைக்கு செல்வதில் விருப்பம் இல்லாத அவரது கணவர் முனியனுக்கும் பரிமளாவிற்கும் இடையே அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தனது சொல் பேச்சை கேட்காத மனைவியின் செயலால் முனியன் மன உலைச்சலில் அவ்வப்போது மது அருந்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

 

 

இந்த நிலையில் கடந்த 2-ஆம் தேதி பரிமளா முனியன் வீட்டில் வைத்திருத்த 4000ரூபாயில் 1000ரூபாய் எடுத்து கொண்டு வேலைக்கு செல்லும் வழியில் இருவருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டு சிறுணையிலிருந்து பாலுசெட்டி செல்லும் சாலையில் பரிமளாவை வழிமறித்து முனியன் வாக்குவாதத்தில் ஈடுபட பரிமளா தான் வைத்திருந்த பிளைடால் முனியனின் கழுத்தை கிழித்துள்ளார். இதனையெடுத்து முனியன் அரசு மருத்துவமனையில் தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்று இது குறித்து பாலுசெட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

 

மேலும் தனது மனைவி வேலைக்கு செல்வதை விருப்பாத முனியன் பரிமளா பணிபுரியக்கூடிய துணிக்கடைக்கு சென்று சண்டையிட்டதால் பரிமளாவை பணியிலிருந்து நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பரிமளா அன்று முதல் முனியனுடன் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் இன்று பிற்பகல் குடித்துவிட்டு வந்த முனியனுக்கும் பரிமளாவிற்கும் இடையே பிரச்சனை ஏற்ப்பட்டதாக கூறப்படும் நிலையில் முனியனின் பெற்றோர் பணி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது முனியன் இறந்துவிட்டதாக பரிமளா தெரிவித்திருக்கிறார். இதனையெடுத்து முனியனின் இறப்பில் சந்தேகம் அவரது பெற்றோருக்கு சந்தேகம் எழுந்து பரிமளாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

 

இது குறித்து‌ போலீசாருக்கு தகவளிக்கப்பட்ட நிலையில் பரிமளா தப்பியோடியிருக்கிறார்.இதனையெடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த பாலுசெட்டி போலீசார் முனியனின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS