BREAKING NEWS

காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் அரிசி கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 13 லட்சம் திருட்டு.

காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் அரிசி கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 13 லட்சம் திருட்டு.

அரிசி விற்பனை செய்து மொத்த வியாபாரிகளுக்கு வழங்க வைத்திருந்த நிலையில் மர்ம நபர்கள் கைவரிசை.

 

காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விசாரணை.

 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கனிகண்டீஸ்வரர் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் வயது 39 காஞ்சிபுரம் வந்தவாசி சாலை செவிலிமேடு பி எஸ் கே நகர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரிசி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

 

இந்நிலையில் அரிசி வியாபாரம் செய்துவிட்டு நேற்றைய இரவு கடையை இளங்கோவன் வழக்கம் போல மூடிவிட்டு சென்றிருக்கிறார்.

 

இந்நிலையில் மீண்டும் இன்று காலையில் கடையை திறந்து திறக்க வந்த போது ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து பார்க்க போது அரிசி வியாபாரம் செய்து வைத்திருந்த 13 லட்சம் ரூபாய் ரொக்க பணம் கல்லாப்பெட்டியிலிருந்து மறுமணவர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

 

இதைத் தொடர்ந்து இளங்கோவன் காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பேரில் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை மேற்கொண்டு தடயவியல் துறையினர் மூலம் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.

 

13 லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

 ஆட்கள் நடமாட்டம் உள்ள முக்கிய சாலை பகுதியிலேயே திருட்டு சம்பவம் நடைபெற்று இருப்பது அப்பகுதி வியாபாரிகள் இடைய பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

 

CATEGORIES
TAGS