BREAKING NEWS

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக கோவில் செயல் அலுவலர் மீது புகார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக கோவில் செயல் அலுவலர் மீது புகார்.

 

செயல் அலுவலரை பதவி இறக்கம் செய்து திருச்செந்தூர் முருகர் கோவிலுக்கு அறப்பணி பணியாளராக மாற்றம் செய்து இந்து சமய அறநிலைத்துறை உத்தரவு.

கோவில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பஞ்ச பூத ஸ்தலங்களில் பிருதிவி ஸ்தலம் என அழைக்கப்படும் மண் ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.

 

3500 ஆண்டுகள் பழமையான ஏகாம்பரநாதர் திருக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

ஏகாம்பரநாதர் திருக்கோவில் சிலை செய்வதில் தங்க மோசடி சிலைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் சர்ச்சைகளும் உள்ள கோவிலாக விளங்கி வருகிறது.

 

ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் செயல் அலுவலராக வேதமூர்த்தி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 8-ம் தேதி திருக்கோவில் அலுவலகத்தில் யாரும் இல்லாத நேரத்தில் செயல் அலுவலர் அலுவலக அறையில் பணி செய்து கொண்டிருந்த பெண் ஊழியரிடம் தகாத முறையில் பாலியல் சென்றது ஈடுபட்டுள்ளார்.

 

இது குறித்து பெண் ஊழியர் அசிங்கப்பட்டு கொண்டு யாரிடம் தெரிவிக்காத நிலையில் சிசிடிவியில் வீடியோ காட்சியும் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி வந்ததை எடுத்து காஞ்சிபுரம் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் வான்மதி விசாரணை செய்தார்.

 

புகாரின் அடிப்படையில் இணை ஆணையர் வான்மதி செயல் அலுவலர் மற்றும் கோவில் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு அறிக்கையை துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார்.

 

புகார் அடிப்படையில் இந்து சமய அலுவலகத்துறை ஆணையர் குமரகுருபன் ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர் வேதமூர்த்தியை செயல் அலுவலர் பதவியிலிருந்து பணியிறக்கம் செய்து அறபணியாளராக மாற்றம் செய்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு உத்தரவிட்டார்.

 

இனி கோயில் பணியாளராக மாற்றப்பட்டுள்ளார் இவருக்கு கோயில் சம்பளத்தில் இருந்து மட்டும் சம்பளம் வரும் என்று ஆணை பிறப்பித்துள்ளார், ஆணையர் நிதியிலிருந்து இதுவரை வந்த சம்பளத்தை இனி வழங்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

 

தற்பொழுது இந்த கோவிலுக்கு ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி ஏகாம்பரநாதர் கோவிலுக்கு மாற்றம் செய்து இந்து சமயம் அறநிலை துறை ஆணையர் குமரகுருபரன் ஆணை பிறப்பித்துள்ளார்.

CATEGORIES
TAGS