காட்பாடி அடுத்த தொண்டான் துளசி முருகர் கோவிலில் திருக்கல்யாணம்.!
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த தொண்டான்துளசி துளசி மலையில் வள்ளி தெய்வானை சமேத முருகர் கோயில் அமைந்துள்ளது.
இந்த முருகர் கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு 6 நாட்கள் இடைவிடாது பூஜைகள் நடந்து நிறைவு பெற்றது.
இந்நிலையில் 7வது நாளான 8ம் தேதி மாலை 4 மணி முதல் ஸ்ரீ கணபதி ஹோமத்துடன் வள்ளி தெய்வானை சமேத முருகருக்கு திருக்கல்யாணம் நடந்தது.
இதை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் ஒன்றன்பின் ஒன்றாக நடந்தது. இதை தொடர்ந்து முருகருக்கு திருக்கல்யாணம் நடந்தது.
இதையடுத்து இரவு அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை தொண்டான்துளசி நீலகண்டன் விமரிசையாக செய்திருந்தார்.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வள்ளி தெய்வானை சமேத முருகரின் திருக்கல்யாணத்தை கண்டு பக்தி பரவசம் அடைந்தனர்.
இந்த வள்ளி தெய்வானை சமேத முருகர் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.