BREAKING NEWS

காட்பாடி இரயில் நிலையத்தை 365 கோடியில் மேம்படுத்த துவக்க பணிகளை பிரதமர் மோடி சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் துவங்கி வைத்தார்

காட்பாடி இரயில் நிலையத்தை 365 கோடியில்  மேம்படுத்த    துவக்க பணிகளை பிரதமர் மோடி சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் துவங்கி வைத்தார்

வேலூர் மாவட்டம் காட்பாடி இரயில் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் பழமையான இரயில் நிலையம் ஆகும். இங்கு தினமும் 120 இரயில்கள் சென்னை மார்க்கமாவும், ஜோலார்பேட்டை மார்க்கமாகவும், திருப்பதி மார்க்கமாகவும், வேலூர் மார்க்கமாகவும் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் சுமார் 30 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகத்தில் உள்ள மிக முக்கிய இரயில்வே சந்திப்புகளில் காட்பாடி இரயில் நிலையமும் ஒன்று. கொரோனா பேரிடர் காலத்தில் நாடு முழுவதும் இரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த போது முதல் முதலாக இந்தியாவிலேயே வெளி மாநிலத்தாரை அரசு செலவில் அனுப்பிவைக்கப்பட்ட முதல் இரயில் காட்பாடியில் இருந்து தான் இயக்கப்பட்டது.இந்த நிலையில் நாடு முழுவதும் ரயில் நிலையங்களை மேம்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டது ரயில் நிலையங்களை பழமை மாறாமல் புதுப்பித்து ஆரம்பத்தை பறைசாற்றும் வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.அந்த வகையில் நாடு முழுவதும் முதற்கட்டமாக 50 ரயில் நிலையங்கள் சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தப்பட உள்ளது. தமிழகத்தில் காட்பாடி, சென்னை எழும்பூர், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய 5 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.2 ஆயிரம் கோடியில் திட்டங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.அவ்வாறு மேம்படுத்தப்பட உள்ள ரயில் நிலையங்களில் காட்பாடி ரயில் நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. காட்பாடி ரயில் நிலையத்தின் மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காட்பாடி ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர்கள் காணொளி காட்சி மூலம் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்கள் இதில் காட்பாடி ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் வேலூர் மேயர் சுஜாதா ஆனந்தகுமார் துணை மேயர் சுனில் குமார் 1வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் அன்பு 12வது வார்டு மாமன்ற உறுப்பினர் டிட்டா சரவணன் மற்றும் பாஜக மற்றும் திமுகவை சேர்ந்த திரளானோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )