BREAKING NEWS

காட்பாடி கிளித்தான்பட்டறை ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் துளசி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு! 

காட்பாடி கிளித்தான்பட்டறை ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் துளசி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு! 

வேலூர் மாவட்டம், காட்பாடி குடியாத்தம் செல்லும் சாலையில் கிளித்தான்பட்டறையில் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தை ஸ்தாபகர் க. மோதிலால் சுவாமி நிர்வகித்து இதை பராமரித்து பல்வேறு பூஜைகளை இடைவிடாது நடத்தி வருகிறார்.

இந்த ஸ்ரீ ராகவேந்திரர் கோவிலில் மகா அன்னதான சேவை, ஸ்ரீ சத்திய நாராயண சுவாமி பூஜை, பல்லக்கு சேவை, ஊஞ்சல் சேவை, திருத்தேர் (ரத) உற்சவ சேவை, சர்வ சேவை, அனைத்து அபிஷேகங்கள், கனகாபிஷேகம் சேவா, வெள்ளிக்கவச சேவா, பஞ்சாமிர்த அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடத்தி வரப்படுகிறது.

இதனை ஸ்ரீ க. மோதிலால் சுவாமி தொடர்ச்சியாக நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புதன்கிழமை பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு விசேஷ அலங்கார பூஜைகள் நடந்தது.

பின்னர் துளசி மலர்களால் அலங்காரம் செய்து வழிபாடு நடந்தது. இதைத் தொடர்ந்து இடைவிடாது நண்பகல் 12 மணி வரை கோவில் நடை திறந்திருந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் இடைவிடாது இரவு 9 மணி வரை தரிசனம் செய்தனர்.

இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது. பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்தாபகர் க. மோதிலால் சுவாமி விமரிசையாக செய்திருந்தார்.

Share this…

CATEGORIES
TAGS