காரியாபட்டியில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் குருபூஜை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி முக்குலத்தோர் உறவின்முறை சார்பாக, மருதுபாண்டியர் குரு பூஜை நடைபெற்றது. உறவின் முறை தலைவர் அய்யாவுத்தேவர் தலைமை வகித்தார்.
செயலாளர் மருது பாண்டியன் முன்னிலை வகித்தார். தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மருது பாண்டியர்கள் திருவுரு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி ஒன்றியச் செயலாளர்கள் கண்ணன், செல்லம், பேரூராட்சித் தலைவர் செந்தில் , மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் ராஜேந்திரன், ஒன்றியக் கவுன்சிலர் சேகர், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி,
ஒன்றிய துணை செயலாளர் குருசாமி திமுக பிரமுகர் வாலை முத்துசாமி, கவுன்சிலர்கள் முகமது முஸ்தபா சங்கேஸ்வரன், சரஸ்வதி பாண்டி தீபா நாகஜோதி,, செல்வராஜ் உறவின்முறை பொருளாளர் அர்ச்சுனன், உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.