காரில் இருந்த சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் பலி..! விபத்தா ? அல்லது சதியா ? என போலீஸ் தீவிர விசாரணை..

கோயம்புத்தூர் உக்கடத்தில், காரில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறி தீப்பற்றியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக ஏ.டி.ஜி.பி தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே அதிகாலை மாருதி 800 காரில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது.
இதில் கார் இரண்டாக உடைந்து அதில் இருந்தவர் பலியான நிலையில், பாதைகளை அடைத்து அப்பகுதியை போலீசார் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர் .
CATEGORIES Uncategorized
TAGS காரில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்து ஒருவர் பலிகுற்றம்கோயம்புத்தூர் உக்கடம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்