காரைக்காலில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்.

காரைக்கால் மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் மற்றும் புது வாழ்வு போதை எதிர்ப்பு இயக்கம் ஆகியவை இணைந்து ஞாயிற்றுக்கிழமை காரைக்கால் ரயில் நிலையத்தில் ரயிலில் செல்லும் பயணிகளிடம் போதையின் தீமைகளை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு பிரச்சாரம் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரா பிரியங்கா தலைமையில் நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்வில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரன், துணை மாவட்ட ஆட்சியர் (வருவாய்) ஆதர்ஷ், என் எஸ் எஸ் ஒருங்கிணைப்பாளர் லெட்சுமனபதி, சமூக அமைப்பாளர் சிங்கராயர், புதுவாழ்வு மதுபோதை மைய செயலாளர் மகேஸ்வரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு போதைக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள்.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போதையின் தீமைகள் குறித்தும் அதனால் ஏற்படும் இழப்புகள் குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள்.இந்நிகழ்வு காரைக்காலில் இருந்து நாகை செல்லும் ரயில் பயணிகளிடம் நடைபெற்றது.
