BREAKING NEWS

காரைக்கால் அரசு மருத்துவமனையை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு.

காரைக்கால் அரசு மருத்துவமனையை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு.

அரசு முறைப் பயணமாக காரைக்கால் மாவட்டத்திற்கு மாண்புமிகு துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் வருகை புரிந்தார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது. மாவட்டத் துணை ஆட்சியர் ஆதர்ஷ் மற்றும் முதுநிலை காவல் கண்காணிப்பாளர், மற்றும் காவல் கண்காணிப்பாளர் (வடக்கு) ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர், துணைநிலை ஆளுநர் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தார்கள். புறநோயாளிகள் மற்றும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்கள். நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தயாரிக்கப்படும் சமையல் கூடத்தைப் பார்வையிட்டார்கள்.

இவ்வாய்வின் போது சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், துணைநிலை ஆளுநரின் செயலாளர் அஜித் விஜய் சௌதரி, சுகாதார துறை இயக்குனர் டாக்டர்’ ஸ்ரீராமுலு, மருத்துவமனை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துணைநிலை ஆளுநர் கூறுகையில் காரைக்கால் அரசு மருத்துவமனையை அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜிப்மர் மருத்துவமனையோடு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

ஜிப்மர் மருத்துவமனையின் ஒத்துழைப்போடு மருத்துவமனையை மேம்படுத்த அரசு திட்டம் உருவாகி இருக்கிறது. கட்டிடம் கட்டுவதற்கான வாய்ப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதியில் உள்ள மக்களுக்கு சிறப்பான சேவைகள் அளிக்கக் கூடிய சிறந்த மருத்துவமனையாக விரைவில் மேம்படுத்தப்படும்.

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட சிறப்பு சிகிச்சை பிரிவுகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. முதலமைச்சருடன்
கலந்தாலோசனை செய்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் மருத்துவத் துறை செயலர் மருத்துவத் துறை இயக்குனர் துணை மாவட்ட ஆட்சியர் (வருவாய்) மற்றும் மருத்துவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )