காரைக்கால் மாவட்டத்தில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினம்.
காரைக்கால் மாவட்டத்தில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினம்.
காரைக்கால் மாவட்டத்தில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினம் இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அன்னாரின் திருவுருவப் படத்திற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரப் பிரியங்கா தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் துணை மாவட்ட ஆட்சியர் (வருவாய்) ஆதர்ஷ் மற்றும் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் துணை மாவட்ட ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) பாஸ்கரன் காவல் கண்காணிப்பாளர் சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized