கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு திருச்சி சீராத்தோப்பு ஸ்ரீலலிதாம்பிகை கோவிலில், 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
திருச்சி சீராதோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் இன்று கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, மூலவர் முன்பு புனித நீர் நிரப்பப்பட்ட 108 சங்குகள் மற்றும் பிரதான கலசங்களை வைத்து யாக குண்டம் அமைத்து சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.
பின்னர் லலிதாம்பிகைக்கு, பால், சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் புனித நீர் நிரப்பப்பட்ட 108 சங்குகளை கொண்டு மகா அபிஷேகமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்பாளுக்கு மகா ஷோடச உபச்சார தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வழிபட்டு சென்றனர்.
CATEGORIES திருச்சி