கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது!!
கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது!!
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் . இவர் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் பரிந்துரை அடிப்படையில் சீனாவை சேர்ந்த 263 பேருக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்டதாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் நேற்று சிபிஐ திடீர் சோதனை நடத்தியது.
இதில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடு மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் உட்பட பல இடங்களில் சோதனை நடைபெற்றது. அதே நேரத்தில் டெல்லியில் லோதி எஸ்டேட்டில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். கர்நாடகா, மும்பை, பஞ்சாப், ஒடிசாவில் என மொத்தம் 10 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடைபெற்றது. இதில் கார்த்தி சிதம்பரம் லண்டன் சென்றுள்ள நிலையில், அவரது இல்லத்திலும் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக அவரது ஆடிட்டர் பாஸ்கரராமனும், 2 வது குற்றவாளியாக கார்த்தி சிதம்பரம் மீதும் சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. 2011 ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில், சீனர்கள் 263 பேருக்கு முறைகேடாக விசா வழங்கப்பட்டுள்ளது. இதற்காக கார்த்தி ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக சிபிஐ தெரிவித்துள்ளது. மின்னஞ்சல் பரிமாற்றம் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் முதல் குற்றவாளியான பாஸ்கரராமனை சிபிஐ இன்று கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கைகள் மேலும் தொடரலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.