BREAKING NEWS

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள காவலர் நினைவு ஸ்தூபிக்கு எஸ்பி பாலாஜி சரவணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள காவலர் நினைவு ஸ்தூபிக்கு எஸ்பி பாலாஜி சரவணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

 

நாடு முழுவதும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் வீரவணக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் உள்ள காவலர் நினைவு ஸ்தூபிக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

 

தொடர்ந்து, பணியின்போது இறந்த காவலர்களின் தியாகம் மற்றும் அவர்களின் நினைவை போற்றும் விதமாக 60 துப்பாக்கி குண்டுகள் முழங்க இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நாம் இன்று நினைவு கூர்கிறோம். 1959 இதே நாளில் சீன ராணுவம் 10 மத்திய பாதுகாப்பு படை வீரர்களை வீழ்த்தியது.

 

 

இந்த தியாகத்தை நாம் நினைவு கூறுகிறோம். இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் 261பேர் மடிந்துள்ளனர். இவர் பணிகளை நாம் செய்து முடிப்போம். மேலும், இவர்கள் பணி வீண் போகாது என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.

 

பின்னர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போலீசார் கண்காணிப்பு வாகனம், கோபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்.

 

பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள காவலர் நினைவு ஸ்தூபிக்கு எஸ்பி பாலாஜி சரவணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

 

கூறுகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காவல் துறை சார்பில் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்ட இரு வாகனம் நகரம் முழுவதும் கண்காணிக்கப்படும்.

 

 

கண்காணிப்பு கோபுரம் 4, சுழற்சி முறையிலும், 125 போலீசார் போக்குவரத்து மற்றும் பொது மக்களுக்காக காவலில் இருப்பர்.

 

வியாபாரி, பொது மக்கள் பாதுகாப்பாக பட்டாசு, வெடித்து அரசு சொன்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

 

மேலும், அனைத்து மக்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )