BREAKING NEWS

காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர்கள் மாதாந்திர ஆய்வு கூட்டம்; சிறப்பாக பணிபுரிந்த 23 காவல் அதிகாரிகளுக்கு வெகுமதி.

காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர்கள் மாதாந்திர ஆய்வு கூட்டம்; சிறப்பாக பணிபுரிந்த 23 காவல் அதிகாரிகளுக்கு வெகுமதி.

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், தலைமையில் அனைத்து உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது சிறப்பாக பணிபுரிந்த 23 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை பாராட்டி வெகுமதி வழங்கினார்.

 

திருநெல்வேலி மாவட்ட ஊரக அனைத்து மகளிரி காவல்நிலைய போக்சோ வழக்கு எதிரிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுக் கொடுத்த காவல் ஆய்வாளர்கள் நாககுமாரி,ராதா மற்றும் சாட்சிகளை விரைவாக நீதிமன்றதில் ஆஜர்படுத்திய இரண்டாம் நிலை காவலர் முத்துலெட்சுமி ஆகியோர்களுக்கும்,

 

 

ஒரே மாதத்தில் 4 கொலை வழக்கு விசாரணையை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலிருந்து, அமர்வு நீதிமன்ற விசாரணைக்கு எடுக்க சிறப்பாக பணிபுரிந்த நாங்குநேரி காவலர் தளவான், மற்றும் அடையாளம் தெரியாத வாகனம் விபத்து ஏற்படுத்தி சென்ற வழக்கில் வாகனம் மற்றும் அதன் ஓட்டுநரை கண்டுபிடித்த இராதாபுரம் தலைமை காவலர்கள்,

 

ஸ்ரீபால், கதிரேசன் ,இயற்கையான முறையில் மரணமடைந்தாக கூறப்பட்ட வழக்கில் புலன்விசாரணை மேற்கொண்டு கொலை வழக்கு என கண்டுபிடித்து எதிரியை கைது செய்த உவரி காவல் ஆய்வாளர் பிரேமா,முதல் நிலை காவலர், இசக்கிமுத்து, இரண்டாம் நிலை காவலர்கள் கஷ்டர் ரோனால்டோ, இலக்கிய விக்னேஷ்,

 

அம்பை உட்கோட்டத்தில் கஞ்சா விற்பனை, இருசக்கர வாகன திருட்டு, காணாமல் போனவர்கள் வழக்கில் எதிரிகளை கண்டுபிடித்தற்காக ஆபிரகாம் ஜோசப், முதல் நிலை காவலர்கள் சேக் பரித்,முகமதுபஷீர், இதேபோல் அம்பை உட்கோட்டத்தில் தலைமை காவலர்கள் முகமது ரபிக், முதல்நிலை காவலர்‌ வேல்முருகன், பக்கிரி என்ற பாஸ்கர்,

 

 

வி.கே.புரம் காவல் சரகத்தில் 304 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த வழக்கில் உதவி ஆய்வாளர் முருகேஷ், முதல் நிலை காவலர்கள் இசக்கிராஜா, கார்த்திக் பாபு,

 

குற்ற‌ வழக்கு உள்ள 64 எதிரிகளுக்கு நன்னடத்தை பிணை (Bind Over) பெற்றுக் கொடுத்ததற்காக முன்னீர்பள்ளம் காவல்நிலையம் முருகப்பெருமாள்,சுத்தமல்லி கொலை வழக்கு எதிரிகளை CCTV கேமரா மூலம் எதிரிகளை கண்டுபிடித்து சிறப்பாக பணிபுரிந்த காவலர் சரவணன், காவல் நிலைய பதிவேடுகளை முறையாக பராமரித்து வந்தற்காக திருக்குறுங்குடி காவல்நிலைய தலைமை காவலர் முத்துக்குமார் உட்பட 23 பேருக்கு வெகுமதி மற்றும் பரிசு வழங்கி ஊக்குவித்தார்.

 

இந்த ஆய்வு கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜூ, துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )