BREAKING NEWS

காவிரி பிரச்சினை உரிமையை மீட்டெடுத்தது அ.தி.மு.க. ஆட்சியில் தான் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் பேச்சு.

காவிரி பிரச்சினை உரிமையை மீட்டெடுத்தது அ.தி.மு.க. ஆட்சியில் தான்  முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் பேச்சு.

 

தஞ்சாவூர்,

தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கழகப் பொன்விழா நிறைவு, 51 – வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தஞ்சையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆர். காந்தி தலைமை வகித்தார். தலைமைக் கழக பேச்சாளர் நள்ளாற்று நடராஜன், மணிமுரசு, ருத்ராதேவி ஆகியோர் பேசினர்.

 

 

மாவட்ட அவைத் தலைவர் திருஞானசம்பந்தம், முன்னாள் அமைச்சர் எஸ்.டி.எஸ். என்று அழைக்கப்படும் சோமசுந்தரத்தின் மகன் எஸ்.டி.எஸ். செல்வம், மாவட்ட கழக இணைச் செயலாளர் சாவித்திரி கோபால், மதுக்கூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் துரை. செந்தில் மற்றும் சிலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரிவுச் செயலாளர்கள் துரை. திருஞானம், இராமச்சந்திரன்,c.v. சேகர் மற்றும் ஏராளமான கலந்து கொண்டனர். 

 

 

மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இனைச் செயலாளர் கு.ராஜமாணிக்கம் வரவேற்றார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:-

உலகத் தமிழ் மாநாடு ஜெயலலிதா ஆட்சியில் தான் தஞ்சையில் நடைபெற்றது. அப்போது தஞ்சை அசுர வளர்ச்சிப் பெற்று. காவிரி பிரச்சனையில் விவசாயிகளின் வயிற்றில் பாலைவாத்தது அதிமுக ஆட்சி தான்.

 

 

காவிரி பிரச்சனையில் வழக்கை வாபஸ் பெற்றவர் கருணாநிதியும், அவரது திமுக ஆட்சியும் தான். காவிரி உரிமைக்காக எம்ஜிஆர் போராடினார். அதற்குப் பிறகு ஜெயலலிதா சட்ட போராட்டம் நடத்தி காவேரி உரிமையில் வெற்றி கண்டார்.

 

இதற்குப் பிறகு 2018 ல் எடப்பாடியார் காவிரி ஆணையம் அமைக்க வேண்டும் என நிறைவேற்றி அதை நிலைநாட்டினார். காவேரி உரிமையை மீட்பதில் 47 ஆண்டுகள் அதிமுகவின் பங்கு உள்ளது. ஆனால் இந்த உரிமையில் திமுக நாடகம் தான் ஆடியது. எண்ணற்றத் திட்டங்களை அதிமுக ஆட்சியில் தான் மக்கள் பயனடைந்தனர்.

 

 

காவிரிப் பிரச்சினையில் முழு வெற்றியைக் கண்டது அதிமுக ஆட்சி தான். காவிரி உரிமையை மீட்டெடுத்ததும் அதிமுக ஆட்சியில் தான். இவர் அவர் பேசினார். முடிவில் முன்னாள் மருத்துவக் கல்லூரி பகுதி கழக செயலாளர் என்.எஸ்.சரவணன் நன்றி கூறினார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )