BREAKING NEWS

கிராம மக்களை அடுத்த பிறவியில் வவ்வால்லாக பிறக்க வேண்டும் என சாபம் விடும் மதுரை ஆதீனத்திற்கு கிராம மக்கள் கடும் கண்டனம்.

கிராம மக்களை அடுத்த பிறவியில் வவ்வால்லாக பிறக்க வேண்டும் என சாபம் விடும் மதுரை ஆதீனத்திற்கு கிராம மக்கள் கடும் கண்டனம்.

சுக்கிரன் கோவிலை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என கோவில் வளாகத்தில் முற்றுகையிட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நவக்கிரகங்களில் ஒன்றாக கருதப்படும் சுக்கிரன் கோவில் இந்த திருக்கோவில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கோயில் இந்தக் கோயிலில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் பாலாலயம் செய்யப்பட்டு இதுநாள் வரை எந்த கும்பாபிஷேக பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.

மேலும் மதுரை ஆதீனம்அருணகிரிநாத ஞானசம்பந்த சன்னிதானமாக இருந்துவந்த இந்நிலையில் அவர் மரணமடைந்ததை அடுத்து புதிய சன்னிதானமாகஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்தர் புதிய சன்னிதானமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

மேலும் இவர் கட்டளை சாமியாக இருந்தபோது கஞ்சனூரில் சரிவர கணக்கை முறையாக பராமரிக்காமல் பணத்தை ஊழல் செய்துவிட்டார்.
குத்தகை நிலுவைத் தொகை காரணமாக நீதிமன்றத்தில் குத்தகைதாரர்கள் சிலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். கோவிலுக்கு சொந்தமான நிலங்களில்
40க்கும் மேற்பட்ட குத்தகைதாரர்கள் மட்டும் இருந்துவரும் நிலையில் பொத்தம் பொதுவாக நான்கு கிராம மக்கள் மீது
தற்போது பதவி ஏற்ற மதுரை ஆதீனம் வீண்பழி சுமத்துகிறார்.

இங்கு உள்ள கிராம மக்களை அடுத்த பிறவியில் வவ்வால்லாக பிறக்க வேண்டும் என சாபம் விடுகிறார்.

எனவே கஞ்சனூர் திருக்கோவிலை ஆய்வு செய்து தமிழக அரசு கட்டுப்பாட்டில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று
கஞ்சனூர், கோட்டூர்,துகிலி, மணலூர் உள்ளிட்ட 4 கிராம மக்கள் கஞ்சனூர் சுக்கிரன் கோவில் முன்பு திரண்டு மதுரை ஆதீனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மக்கள் திரள் உண்ணாவிரதம் நடைபெறும் என கிராம மக்கள் அறிவித்தனர்.

இதனால் கோவில் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )