BREAKING NEWS

கிறிதுமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆறுமுகநேரி ஆட்டு சந்தையில் களைகட்டிய வியாபாரம்.

கிறிதுமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆறுமுகநேரி ஆட்டு சந்தையில் களைகட்டிய வியாபாரம்.

கிறிதுமஸ் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களில் சிறப்புமிக்க ஆட்டு சந்தையில் ஒன்றான ஆறுமுகநேரி ஆட்டு சந்தையில் களைகட்டிய வியாபாரம். இன்று ஒரே நாளில் ஆடுகள் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி ஆட்டுச் சந்தை தென் மாவட்டங்களில்
பெயர் பெற்றது. இங்கு வாரந்தோறும் சனிக்கிழமை கூடும் இந்த ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் கிறிதுமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதை ஒட்டி இந்த ஆட்டுச் சந்தை இன்று அதிகாலை முதல் விற்பனை துவங்கியது.

 

 

இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை விலைக்கு வாங்க வந்திருந்தனர். சந்தையில் தோராயமாக 10 கிலோ முதல் 12 கிலோ வரை எடையுள்ள வெள்ளாடு ரூபாய் 15,000முதல் 20,000 வரை விற்பனை செய்யப்பட்டன.

 

 

அதிகாலை துவங்கிய இந்த ஆட்டுச் சந்தையில் கொடி ஆடு, சீமை ஆடு, நாட்டு ஆடு, வேலி ஆடு, செம்மறி ஆடு என பல்வேறு வகையான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனைகியுள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

CATEGORIES
TAGS