BREAKING NEWS

கீழையூரில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இடுபொருட்கள் நிவாரணம் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினார்.

கீழையூரில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இடுபொருட்கள் நிவாரணம் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே கீழையூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான உப்பு சந்தை மாரியம்மன் கோயிலில் வருவாய், பேரிடர் மேலாண்மை துறை மற்றும் வேளாண்மை-உழவர்துறை சார்பில் 2022 வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இடுபொருட்கள் நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் விவசாயிகளுக்கு வழங்கும் விழா நடைபெற்றது.

 

 

 

விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமை தாங்கினார். மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், கோட்டாட்சியர் அர்ச்சனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

 

இதில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத்துறை அமைச்சரும், மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சிவ.வீ. மெய்யநாதன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு இடுபொருள்கள் நிவாரணத்திற்கான ஆணை மற்றும் விவசாய உபகரணங்களை வழங்கி பேசினார்.

 

இதில் திமுக ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.அன்பழகன், எம்.அப்துல் மாலிக், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெயபாலன், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தாமஸ், வேளாண்மை உதவி இயக்குனர் (தர கட்டுப்பாடு) சிவ வீரபாண்டியன், குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன்,

 

 

செம்பை ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் திருவளர்சுந்தரி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வெண்ணிலா தென்னரசு மற்றும் வருவாய்த் துறையினர், வேளாண்மை-உழவர் துறையினர், திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS