கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் திட்டத்தை கைவிடக் கோரி கவனயீர்ப்பு விழிப்புணர்வு கூட்டம்.
கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் திட்டத்தை கைவிடக் கோரி கவனயீர்ப்பு விழிப்புணர்வு கூட்டம்.
பெருமைக்குரிய கீழ்பவானி பாசன கால்வாய் கான்கிரீட் திட்டத்தை உலக வங்கியில் வங்கியில் கடன் பெற்று திட்டத்தை அமல்படுத்துவதை கைவிட வேண்டும் எனவும் பூமிப்பந்தை சூடாக்கும் இத்தகைய திட்டத்தை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் கீழ்பவானி பாசன பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் நல்லசாமி தெரிவித்துள்ளார்…
கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் திட்டத்தை கைவிடக் கோரி கவனயீர்ப்பு விழிப்புணர்வு கூட்டம் முகாசி அனுமன் பள்ளியில் நடந்தது.
இக் கவனயீர்ப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கள்நல்லசாமி பேட்டி அளித்தார்…
அப்போது அவர் கூறுகையில்,
கீழ்பவானி வாய்க்கால் முழுதும் மண்ணால் வெட்டப்பட்டுள்ளது.கீழ்பவானி வாய்க்கால் மழைநீர் அறுவடை செய்யும் திட்டம்.
கான்கிரீட் கால்வாய் நிலத்தடி நீர் செறிவூட்டப் படுவது பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி சுற்றுச்சூழல் இதனால் கெடும்…
கீழ்பவானி பாசன வாய்க்காலில் வரும் நீர் முழுவதும் விவசாய நிலங்களில் பாய்கிறது.நீர் வீணாக கடலில் கலப்பதில்லை.
நேரடியாகவும் மறைமுகமாகவும் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது..
காவிரி நடுவர் நீதிமன்றத்தில் பாராட்டைப் பெற்ற ஒரு திட்டம் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்த நடுவர் நீதி மன்றத்தால் வலியுறுத்தப்பட்டுள்ளது…
கரூர் திருப்பூர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக திகழும் இத்தகைய பெருமைக்குரிய கால்வாய் திட்டத்தை கான்கிரீட் கால்வாய் மாற்றினால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டு லட்சக் கணக்கான மரங்கள் வெட்டப்படும் சூழ்நிலை ஏற்படும் என்றார்.
உலக வங்கியில் 910 கோடி ரூபாய் கடனாக பெற்று பூமிப்பந்தை மேலும் சூடாக்கும் இத்தகைய திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
மக்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டிருக்கும் தமிழக அரசு கால்வாயை தூர்வாரும் கரைகளை பலப்படுத்தும் விவசாயிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இத்திட்டத்தை உடனடியாக கை விடும் என்ற நம்பிக்கை பாசன விவசாயிகளுக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்…
தொடர்ந்து பேசுகையில் கான்கிரீட் கால்வாய் உள்ள மண் பழசாகி போனதாக பொதுப்பணித் துறையினர் தெரிவிக்கின்றனர்.அவர்களின் கருத்து முரண்பட்டதாக உள்ளது.
தமிழக அரசு விரைவில் இத் திட்டத்தை ரத்து செய்து அதற்கான அறிவிப்பை வெளியிடும் என்ற எண்ணம் எங்களுக்கு உள்ளது என்றார் ..
இக்கூட்டத்திற்கு கீழ்பவானி பாசன ஆயக்கட்டு தாரர்கள் மற்றும் பாசன வசதி பெறும் விவசாயிகள் திரளாக பங்கேற்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.