குடியாத்தம் மாணவன் K. நிதின்க்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு மார்ச் 13 குடியாத்தம் ஜவஹர்லால் பகுதியை சேர்ந்த ஆர்யா CBSE பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் K.நிதின் என்ற மாணவன் திருக்கோவிலூரில் நடைபெற்ற சிலம்பம் சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொடர்ந்து 30 நிமிடம் மண்பானை மேல் நின்று சிலம்பம் சுற்றி சாதனை புரிந்த மாணவன். K.நிதின் க்கு இப் போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட நடிகர். திரு. வினோத். இளம் சாதனையாளர் விருது வழங்கினார்.
இவர் ஏற்கனவே 26/2/2023 அன்று திருப்பூரில் நடைபெற்ற நோபல் சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 4 மணி நேரம் 26 நிமிடங்கள் தொடர்ந்து நிற்காமல் சிலம்பம் சுற்றி உலக சாதனை புரிந்தார் என்று குறிப்பிடத்தக்கது.
CATEGORIES வேலூர்
TAGS 30 நிமிடம் மண்பானை மேல் நின்று சிலம்பம் சுற்றி சாதனைகுடியாத்தம்சிலம்பம் சாதனைசிலம்பம் போட்டிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்பேரணாம்பட்டுவேலூர் மாவட்டம்