குடும்பத்தை மிரட்டி விட்டு தனிமையில் இருந்த முதியவரை மீட்டர் சமூகநலத் துறை யினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தஞ்சை புதிய பேருந்து நிலையம் சாலை வள்ளலார் நகரை சேர்ந்தவர் வெங்கட்ராமன் 65 ஓய்வுபெற்ற வேளாண் துறை பொறியாளர் இவருக்கு மாலதி என்ற மனைவி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். 3 மகன்கள் உள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடம் உள்ள தீய பழக்கத்தால் குடும்பத்தை விரட்டிவிட்டு தான் தனியாக வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இவர் மற்றும் அருகிலுள்ள நபர்களுடன் இணைந்து தினமும் மது போதைக்கு அடிமையாகி குடிப்பழக்கத்தினால் வீட்டிலேயே தனியாக இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதனை அடுத்து இவருக்கு உதவிக்கு யாரும் வரவில்லை உதவிக்கு வராத நிலையில் கடந்த 4 நாட்களாக வீட்டின் உள்ளே இருந்தபடியே பட்டினியால் அலறல் சத்தம் கொடுத்துள்ளார்.
அக்கம்பக்கத்தினர் மருத்துவக் கல்லூரி காவல்துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சமூக நலத்துறையினருடன் இணைந்து காவல்துறையினர் அவர் வீட்டிற்குச் சென்று பூட்டியிருந்த வீட்டின் உள்ளே இருந்த சாவியை பெற்று அவரை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.