குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தேங்காய் வழங்கக் கோரி பாஜக விவசாய அணியினர் தேங்காயுடன் ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்ட செய்தியாளர் R.முத்துராஜ்.
தேனி மாவட்டம்,
தமிழகத்தில் வருகின்ற தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை உடன் ரூபாய் ஆயிரம் ரொக்கப் பணமும் வழங்கப்பட உள்ளன.
இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு தேங்காய் வழங்கக் கோரி பாஜக விவசாய அணி சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்ட பாஜக விவசாய அணி சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக சுமார் 30க்கும் மேற்பட்ட பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தேங்காய் வழங்க வேண்டும், தேங்காய் விவசாயிகளுக்கு நிர்ணயம் மற்றும் நிரந்தர விலை செய்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னம் பிள்ளை மற்றும் தேங்காயுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி தமிழக அரசை கண்டித்து கோசங்களை எழுப்பினர். பின் தங்கிய கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் வழங்கிய பிறகு அங்கிருந்து பாஜகவினர் கலைந்து சென்றனர்.