BREAKING NEWS

குத்தாலத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் இலவச தெரபி முகாம் நடைபெறுகிறது.

குத்தாலத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் இலவச தெரபி முகாம் நடைபெறுகிறது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் இலவச தெரபி முகாம் நடைபெற்றது.

 

இந்த முகாம் வெல்நெஸ் சென்டர் குத்தாலம் வர்த்தக சங்கம், லயன்ஸ் சங்கம் மற்றும் பொது சமூக சேவகர்கள் இணைந்து நடத்தினார்கள். இந்நிகழ்ச்சி வர்த்தக சங்கத்தின் பேரமைப்பு செயலாளர் சாமி செல்வம் தலைமையிலும் முகாம் ஒருங்கிணைப்பாளர் சுந்தரவிநாயகம் சரண்யா ஆகிய முன்னிலையிலும் நடைபெற்றது.

 

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக நிர்வாக இயக்குனர் சுரேஷ்கவுதம். தென்னிந்திய பயிற்சி இயக்குனர் லதா.ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்த முகாம் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் வரும் சனிக்கிழமை வரை நடைபெறுகிறது.

 

இதில் ஏராளமான முதியவர்கள் பெண்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு தெரபி சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதிகமான முதியவர்கள் கலந்து கொண்டு தங்களது கை, கால், மூட்டு வலி உடல் சோர்வு ஆகியவற்றிற்காக இந்த தெரபி சிகிச்சை மூலம் பயன் பெற்று வருகிறார்கள்.

Share this…

CATEGORIES
TAGS