BREAKING NEWS

குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் அவைக்கூடத்தில் திங்கள் கிழமை நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கே.மகேந்திரன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வி.கஜேந்திரன், சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் 53 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்களை உதவியாளர் திருநாவுக்கரசு வாசித்தார். கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:
ரமேஷ்(திமுக): பொரும்பூர் ஊராட்சியில் போதிய தெரு மின் விளக்குகள் அமைக்க வேண்டும். கழனிவாசலில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும்.

வினோத்(பாஜக): செம்பியன் கோமல் மாரியம்மன் கோவில் தெரு,நச்சினார்குடி-கள்ளிக்காடு சாலைகளை சீரமைக்க வேண்டும். செழியன்(அதிமுக): இதுவரை நான் வைத்த எந்த கோரிக்கையும் நிறைவேற்றாத காரணத்தால் தற்போது நான் புதிதாக எந்த கோரிக்கையும் வைக்க விரும்பவில்லை. பாஸ்கரன்(அதிமுக): கீழ பெரம்பூரில் காருகுடி வாய்க்கால் ஆக்கிரமித்து மூடப்பட்டுள்ளது.

விவசாய பாசன வசதிக்காக அதை வெட்டி சரி செய்ய வேண்டும். சத்யா(அதிமுக): கொத்தமங்கலத்தில் தார் சாலை அமைக்க வேண்டும். திவ்யா(திமுக): கோமல்-கொழையூர் பாலத்தை சரிசெய்ய வேண்டும். கொழையூர் ஊராட்சி செயலர் ஒன்றியக்குழு உறுப்பினருக்கு எந்த தகவலும் தெரிவிப்பது இல்லை.  ராமதாஸ்(திமுக): வில்லியநல்லூர் ஊராட்சியில் தேவையான சாலை அமைக்க வேண்டும்.

 

ராஜேஸ்வரி(திமுக): வாணாதிராஜபுரத்தில் நூலகம், உடற்பயிற்சி மையம் அமைக்க வேண்டும்.
பள்ளிவாசல் தெரு,நூரியாதெரு உள்ளிட்ட தெருக்களில் சாலை அமைக்க வேண்டும்.விபத்துகளை தவிர்க்க போதிய வேகதடை அமைக்க வேண்டும். ராஜா (திமுக):
அரையபுரம்,தொழுதாலங்குடி கிராமங்களில் பழுதடைந்த குடிநீர் தொட்டிகளை சரிசெய்ய வேண்டும்.
தலைவர்:அனைத்து உறுப்பினர்களின் பாரபட்சமின்றி கோரிக்கைகளும் ஏற்கப்பட்டு நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றப்படும். இக்கூட்டத்தில்,மேலாளர் சாந்தி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )