BREAKING NEWS

குத்தாலம் வடக்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழக சார்பாக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

குத்தாலம் வடக்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழக சார்பாக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வடக்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழக சார்பாக பொது உறுப்பினர்கள் கூட்டமானது தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு பேரூர் அவைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

 

வடக்கு ஒன்றிய செயலாளர் குமரா, வைத்தி, ஒன்றிய பெருந்தலைவர் மகேந்திரன், பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளருமான நிவேதா.எம்.முருகன் கலந்து கொண்டு கழகத் தலைவர் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுத்த பொதுக்குழுவிற்கு நன்றி தெரிவித்தல்.

 

பேராசிரியர் பெருந்தகை நூற்றாண்டு நிறைவு விழா.உதயாநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்தல்.15 வது கழக அமைப்பு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்தல், கழக ஆக்கப் பணிகள் உள்ளிட்ட தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

 

இதில் திமுக கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் கல்யாணம்.மாநிலக் கொள்கை பரப்பு துணை செயலாளர் அன்பழகன்.மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி சங்கர்.மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள். வார்டு கழக செயலாளர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஒன்றிய கழக முன்னாள்.இந்நாள் நிர்வாகிகள் இளைஞரணி,

 

மாணவரணி சார்பணி நிர்வாகிகள் கழக மூத்த முன்னோடிகள் என அனைவரும் கலந்து கொண்டனர் கூட்டத்தின் இறுதியில் பேரூர் கழக செயலாளரும் பேரூராட்சி மன்ற துணைத் தலைவருமான சம்சுதீன் நன்றியுரையாற்றி கூட்டத்தை நிறைவு செய்தார்.

 

CATEGORIES
TAGS