BREAKING NEWS

கும்பகோணத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருக்கோவில் 46 கோவிலில் உள்ள 250 அச்சகர்களுக்கும் பணியாளர்களுக்கும் புத்தாடை மற்றும் சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.

கும்பகோணத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருக்கோவில் 46 கோவிலில் உள்ள 250 அச்சகர்களுக்கும் பணியாளர்களுக்கும் புத்தாடை மற்றும் சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் பணி புரியும் ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 ஜோடி புது சீருடைகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

 

 

அதன்படி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் உள்ள பூசாரி, அர்ச்சகர், பட்டாச்சாரியார் போன்ற பணிகளில் இருக்கும் ஆண்களுக்கு பருத்தி வேட்டியும், பெண்களுக்கு புடவையும் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான சீருடையும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

 

இதன் ஒரு பகுதியாக கும்பேஸ்வரன் கோவிலில் 46 கோயிலில் உள்ள 250 கோவில் அர்ச்சகர்கள் பணியாளர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம் தலைமையில் புத்தாண்டை மற்றும் சீருடை வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் துணை மேயர் சு.ப தமிழழகன் மண்டல தலைவர் ஆசைத்தம்பி அவைத் தலைவர் வாசுதேவன் மாமன்ற உறுப்பினர்கள் அனந்தராமன் செல்வராஜ் இணை ஆணையர் சாந்தா உதவி ஆணையர் உமாதேவி செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS