கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக மற்றும் இளைஞர் அணி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்த கழக இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக மற்றும் இளைஞர் அணி சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு அறிவாலய கட்டிட அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
மாநிலங்களவை உறுப்பினர் எஸ் கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார். அமைச்சர்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ராமலிங்கம், எம்.பி கும்பகோணம் அன்பழகன், எம்எல்ஏ,
மாநகர செயலாளர் சு.ப.தமிழழகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் குட்டி தட்சிணாமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் துணைத் தலைவர் எஸ் கே முத்துச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கழக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு அறிவாலய கட்டிட அடிக்கல் நாட்டினார் அதன் பின்னர் இளைஞரணி சார்பில் 320 ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச புத்தகங்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரும் திருவையாறு எம்எல்ஏவுமான துரை.சந்திரசேகரன் மற்றும் ஒன்றிய, பேரூர், வார்டு, கிளை கழக நிர்வாகிகள், மாவட்ட ஒன்றிய பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.