கும்பகோணத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அரிக்கன் விளக்கை கையில் ஏந்தி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.

மின் கட்டணம் உயர்வு , சொத்து வரி , வீட்டு வரி உயர்வு , விலைவாசி ஏற்றம் , சட்டம் ஒழுங்கு சீர்குழைவு , தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் , தமிழக மக்களை வஞ்சித்தல் உள்ளிட்ட தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து , கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு தஞ்சை வடக்கு மாவட்ட அவைத் தலைவர் ராம்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . அதிமுக அமைப்பு செயலாளரும் , முன்னாள் அமைச்சருமான ஓ .எஸ் . மணியன் கண்டன உரையாற்றி தொடங்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் , முன்னாள் எம்.பி. ஆர் .கே . பாரதிமோகன் , முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமநாதன் , திருவையாறு ரத்தினசாமி , வலங்கைமான் இளமதி சுப்பிரமணியம் , திருவிடைமருதூர் தவமணி மற்றும் ஒன்றிய செயலாளர்கள் சோழபுரம் அறிவழகன் , அசோக்குமார் , முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க நிர்வாகிகள் , ஆயிரக்கணக்காண தொண்டர்களும் கலந்து கொண்டனர் .
