BREAKING NEWS

கும்பகோணத்தில் மேலக்காவேரி பகுதியில் கார் ஓட்டுனர் மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணத்தில் மேலக்காவேரி பகுதியில் கார் ஓட்டுனர் மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணத்தில் மேலக்காவேரி பகுதி பெருமாண்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் மகன் தினகரன் (எ) தினேஷ் (28). இவர் கார் ஓட்டுநராக உள்ளார். இவருக்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணமாகி செல்வகுமாரி என்ற மனைவி உள்ளார்.
இந்நிலையில் மாலை 5 மணி அளவில் பெருமாண்டி பத்மநாபபுரம் தெருவில் மர்மமான முறையில் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்திருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினர் தகவல் தெரிவித்ததன் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிழக்கு காவல் துறை ஆய்வாளர் அழகேசன் தினேஷின் பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தினகரனை வெட்டி கொலை செய்த மர்மநபர்கள் யார்? முன்விரோதம் காரணமாக கொலை செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த கொலை சம்பந்தமாக 2 பேர் ஆஜராகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )