BREAKING NEWS

கும்பகோணத்தில் 4 வயது குழந்தை மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு.

கும்பகோணத்தில் 4 வயது குழந்தை மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு.

கும்பகோணம் பெசன்ட் ரோடு சேர்ந்தவர் ராஜா (42) இவர் நகை கில்ட் ஷாப் நடத்திவருகிறார் இவரது மனைவி தேன்மொழி (35) இவர்களுக்கு எல்கேஜி சேர்க்கப்பட்டுள்ள கேசவ் (3) என்ற மகனும் யூகேஜி சேர்க்கப்பட்டுள்ள கோபிகா (4) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று செவ்வாய்கிழமை காலை பச்சையப்பன் தெருவில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிக்கும் ராஜாவின் தங்கை வீட்டில் கோபிகாவை அவர்களது பெற்றோர் விட்டு சென்றுள்ளனர்.

அப்போது 4-வது மாடியில் உள்ள வீட்டின் பால்கனியில் விளையாண்டு கொண்டிருந்த கோபிகா எதிர்பாராதவிதமாக தவறிக் கீழே விழுந்துள்ளார். சம்பவத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சையில் இருந்த குழந்தை கோபிகா நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து கோபிகாவின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )