கும்பகோணம் அரசினர் கலைக் கல்லுாரி தன்னாட்சி சார்பில் நான் முதல்வன் திட்டத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி.
தஞ்சாவூர் மாவட்டம்,
தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தில் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவ மாணவியர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது.
நான் முதல்வன் திட்டத்தில் போக்குவரத்து சார்ந்த பயிற்சி, வங்கி வேலை வாய்ப்பு, மாணவியர்களுக்கு ஆயிரம் ரூபாய் சிறப்புத் திட்டம், பன்மொழிக் கற்பித்தல் மற்றும் கல்லூரி முடித்த மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி என்று 500 க்கும் மேற்பட்ட இறுதியாண்டு மாணவர்கள் அரசு கல்லூரி வரலாற்றில் இதுவரை இல்லாமல் பயனடைந்து வருகின்றனர்.
இப்பயிற்சி பெறும் மாணவ மாணவியர்கள். சமூகத் தொண்டு மற்றும் பிறர்க்கு உதவும் மனப்பான்மை பெற்று தாங்களாகவே முன்வந்து கல்லுாரியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், கடைநிலை ஊழியர்களுக்குப் பொன்னாடை அணிவித்து பொங்கல் பரிசுத் தொகுப்பு வேஷ்டி, சேலை, ரொக்கப் பரிசு வழங்கி தமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை வழங்கினர்.
கல்லுாரி முதல்வர் முனைவர் நா. தனராஜன், தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி மூத்தப் பேராசிரியர்கள், மா மீனாட்சிசுந்தரம், தேர்வு நெறியாளர் வே. இராமசுப்ரமணியன், சீ.தங்கராசு, நிதியாளர் இரா.கமல் ஆனந்த், துறைத்தலைவர்கள் மற்றும் துறைப் பேராசிரியர்கள், கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் அ.ரூபி, சா.இரமேஷ், சங்கரலிங்கம் ஆகியோர் இந்நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து இருந்தனர்.