கும்பகோணம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம்.
![கும்பகோணம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம். கும்பகோணம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம்.](https://aramseithigal.com/wp-content/uploads/2023/02/IMG-20230202-WA0160.jpg)
அரசு கொறாட கோவி.செழியன் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாளில் அரசு பள்ளி, மற்றும் உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளின் மேற்படிப்புக்கான கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம் நடைப்பெற்றது.
முகாமிற்க்கு தஞ்சை மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு துணை தலைவர் கோ.க.அண்ணாதுரை முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் முகாமை தொடங்கி வைத்தார்.
பேராசிரியர்கள் ஆனந்தராஜ், முருகையன் பக்கிரிசாமி, சர்வதேச மழலையர் கல்வி ஆராய்ச்சியாளர் ஷோபா மணிகண்டன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களிடையே ஆலோசனைகளையும், கருத்துகளையும் வழங்கினர்.
நடப்பாண்டு பொதுத் தேர்வு முடிந்தவுடன் பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு, மற்றும் மேற்படிப்பு ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் முகாமில் தெரிவித்தனர்.
திருப்பனந்தாள் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் மிசா மனோகரன், ரவி.உதயசந்திரன், நகர செயலாளர் சப்பானி, பேரூராட்சி தலைவர் வனிதா ஸ்டாலின், மற்றும்
திருப்பனந்தாள், அணைக்கரை, பள்ளம் பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.