BREAKING NEWS

கும்பகோணம் அருகே குறுவை தொகுப்பு திட்ட தொடக்க விழா!.

கும்பகோணம் அருகே குறுவை தொகுப்பு திட்ட தொடக்க விழா!.

தலைமை அரசு கொறடா கோவி. செழியன், எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

குறுவை சாகுபடி பணிகளுக்காக இந்த ஆண்டு முன்கூட்டியே கடந்த மே மாதம் 24-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீரை பயன்படுத்தி தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 74 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறுவை சாகுபடி பணிகளுக்காக தஞ்சை மாவட்டத்திற்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் திருப்பனந்தாளை அடுத்த பந்தநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் குறுவை தொகுப்பு திட்ட தொடக்க விழா நடைபெற்றது.

விழாவிற்கு வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், ஒன்றிய குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன், துணைத் தலைவர் கோ.கா. அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தலைமை அரசு கொறடா கோவி.செழியன் எம்.எல்.ஏ பங்கேற்று விவசாயி ஒருவருக்கு உரம் உள்பட தொகுப்பினை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக இந்த திட்டத்தின்கீழ் திருப்பனந்தாள் ஒன்றியத்தில் உள்ள பகுதிகளை சேர்ந்த 50 விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தின்கீழ் உதவிகள் வழங்கப்பட்டன.முடிவில் வேளாண்மை உதவி இயக்குனர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )