கும்பகோணம் அருகே சிவசேனா கட்சியில் புதிய பொறுப்பாளர்கள் இணைப்பு விழா.

தஞ்சை மாவட்டம் சோழபுரத்தில் சிவசேனா கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு
தஞ்சை ஒருங்கிணைந்த மண்டல அமைப்பாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். ஹரிஹர குமரவேல் நாயனார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
வருகின்ற விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சோழபுரம் கடைத்தெருவில் விநாயகர் பிரதிஷ்டை செய்து ஊர்வலம் நடத்துவது, சோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இல்லாமல் பள்ளி மாணவ,மாணவிகள் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் பள்ளியை சுற்றி தடுப்பு சுற்றுச்சுவர் அரசு கட்டித்தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
முன்னதாக
சிவசேனா
கட்சியில் புதிய நிர்வாகிகள் இணைப்பு விழா நடைபெற்றது.
கூட்டத்தில் சிவசேனா நிர்வாகிகள் பிரபாகரன், மோகனசுந்தரம். மானம்பாடி ராமச்சந்திரன், திருபுவனம் குமார், பூக்கடை ஆனந்த். சத்தியமூர்த்தி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.