BREAKING NEWS

கும்பகோணம் ஓட்டுனர் கொலையில் கேரளாவில் தப்பி ஓடிய வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை.

கும்பகோணம் ஓட்டுனர் கொலையில்  கேரளாவில் தப்பி ஓடிய வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் கடந்த 31ம் தேதி அன்று மாலை நடந்த தினேஷ் என்பவரின் கொலை வழக்கு தொடர்பாக குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவிப்பிரியா உத்தரவின் பேரில் கும்பகோணம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அசோகன் மேற்பார்வையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் அழகேசன் தனிப்படை உதவி ஆய்வாளர் கீர்த்தி வாசன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜா, செல்வகுமார், காவலர்கள் பாலு, நாடிமுத்து ,சுரேஷ், ஜனார்த்தனன், பார்த்திபன்,நிசார், அசோக் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் கொலை வழக்கில் தொடர்புடைய ஆறு நபர்களை ஏற்கனவே கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான தீனா@ தீன தயாளன் என்பவரை நேற்று கேரள மாநிலத்தில் வைத்து கும்பகோணம் தனிப்படையினர் கைது செய்து தற்சமயம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )